முன்னுரிமை பட்டியலில் உள்ளோருக்கு "பூஸ்டர்"

உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்

 கொரோனா தொற்று ஒழிப்புக்கான பூஸ்டர் (Booster ) தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்னுரிமை பட்டியலிலுள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை ஏற்ற, உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அதற்கமைய, பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

Wed, 10/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை