அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பென்டோரா ஆவணத்தில் பெயர் அம்பலமாகியிருக்கும் அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் 19 பரவலைத் தொடர்ந்து நாட்டின் அரிசி விலையை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசி மற்றும் நெல்லின் விலையை தீர்மானிக்கின்றனர். விவசாயிகளுக்கு உரம் இல்லை. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வரிசையில் இருந்தே பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றனர். மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் பெரும்பாலான மக்கள் நாளொன்றுக்கு 02 டொலர்களுக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அன்றாட செலவை ஈட்டிக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். ஆனால் இவ்வாறான நிலையில் நாட்டில் தனவந்தர்கள் சிலர் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தில் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். பென்டோரா ஆவணம் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.பென்டோரா ஆவணத்தில் இதற்கு முன்னர் பல்வேறு தரப்பினரின் பெயர்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இந்த முறையே முதல்தடவையாக அரசியல்வாதி ஒருவரின் பெயர் வெளிவந்திருக்கின்றது. நிரூபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நாடேசன் ஆகியோரின் பெயரில் இருக்கும் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றார்.

 ஷம்ஸ் பாஹிம்,சுப்ரமணியம் நிஷாந்தன்

Wed, 10/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை