ஜிஎஸ்பி+ சலுகைக் காலத்தை மேலும் நீடிக்க வேண்டுகோள்

ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் சர்வமத தலைவர்கள் கோரிக்கை

கொரோனா தொற்று காரணமாக நாடு இக்கட்டான ஒரு சூழ்நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதற்கான ஏற்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினருக்கு சர்வமத தலைவர்கள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். கடந்த ஒன்றரை வருட காலங்களுக்கு மேலாக covid-19 காரணமாக நாடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டதன் காரணமாக பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான ரீதியில் பாதிக்கப்பட்டு மக்களது இயல்பு வாழ்க்கையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன் இறக்குமதியும் பெருமளவில் தடைப்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கை மக்களது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்திக்கொண்டு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் நடிக்க வேண்டும் என சர்வமதத் தலைவர்கள் ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சர்வமத தலைவர்களான கலாநிதி அக்கர நாயக்க தேரர், சிவஸ்ரீ கலாநிதி பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள், கலாநிதி ஹஸன் மௌலானா, வண பிதா அருட்தந்தை குருகுல சூரியராய்ச்சி ஆகியோர் கூட்டாக இந்த வேண்டுகோள் அறிக்கையை விட்டுள்ளனர்.

Mon, 10/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை