இராணுவத்தளபதி ரஷ்யா பயணம்

இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எட்டு நாள் நல்லெண்ண விஜயமாக ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார்.

ரஷ்ய தரைப்படைகளின் தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ்வின் (Oleg Salyukov) அழைப்பின் பேரில் அவர் இந்த  நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

ரஷ்ய தரைப்படைகளின் இராணுவ தலைமைத் தளபதி, இராணுவ ஜெனரல் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒலெக் சல்யுகோவ் ஆகியோரின் அழைப்பினை ஏற்று எட்டு நாள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மொஸ்கோவை சென்றடைந்தார்.

இலங்கை இராணுவத் தளபதி மொஸ்கோவிற்கு வருகை தந்தபோது இலங்கை மற்றும் ரஷ்ய இராணுவம் இடையே நிலவும் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை தனித்துவமாக வெளிப்படுத்தி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், அமைச்சு ஆலோசகர்கள் மற்றும் சிரேஷ்ட ரஷ்ய இராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.

ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவில் ‘தெரியா சிப்பாய்’ நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ரஷ்ய தரைப்படைகளின் தலைமை தளபதி, இராணுவ ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர் மொஸ்கோ கிரெம்ளினின் ஆயுத அருங்காட்சியகம், மாஸ்கோ உயர் ஒருங்கிணைந்த ஆயுதக் கட்டளைப் பள்ளியினை அதன் தளபதி மேஜர் ஜெனரல் ரோமன் பின்யுகோவ்வுடன் பார்வையிடுவார்.

Wed, 10/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை