அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்பு கோரிக்கை

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே கொரோனா நிலைமையை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர்  நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகளின் அதிகரிப்பு குறித்து தொற்றுநோயியல் பிரிவு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், தேவையான விவரங்களை வழங்கும் என்றும் அவர் கூறினார். சிறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதிப் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Wed, 10/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை