திரைப்படங்களில் மதுபானம், சிகரட் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை

திரைப்படங்களில் மதுபானம், சிகரட் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை-ADIC Zoom Meeting-Drug-Cigarette Usage Discussion

- சிறுவர்கள், இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் ஆராய்வு

திரைப்படங்களின் மூலம் வெளிவருகின்ற மதுசாரம், சிகரட், ஏனைய போதைப்பொருள் விளம்பரங்கள், அவற்றின் தாக்கங்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இவ்வாறான விளம்பரங்களினால் எவ்வாறு பாதிப்படைகின்றனர் என்பது தொடர்பில் ஆராயும் இணையவழி ஊடகச்சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் குறித்த இணையவழி ஊடகச்சந்திப்பு நடாத்தப்பட்டிருந்தது.

இதில் சிறப்பு அதிதிகளாக புபுது சுமனசேகர, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர், கலாநிதி. எஸ். ரகுராம், சிரேஷ்ட விரிவுரையாளர், ஊடகக்கற்கை நெறி பிரதானி, யாழ் பல்கலைக்கழகம் மற்றும் கலாநிதி. எஸ். ஜீவசுதன், சிரேஷ்ட விரிவுரையாளர், சமூகவியல் கற்கைநெறி பிரதானி, யாழ் பல்கலைக்கழகம், ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது திரைப்படங்களின் மூலம் வெளிவருகின்ற மதுசாரம், சிகரட், ஏனைய போதைப்பொருள் விளம்பரங்கள், அவற்றின் தாக்கங்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இவ்வாறான விளம்பரங்களினால் எவ்வாறு பாதிப்படைகின்றமை தொடர்பால் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

Sun, 10/17/2021 - 13:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை