எனது அமைச்சுக்களின் கீழ் தவறான எவருக்கும் இடமில்லை

மோசடி, ஊழல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை

 

தான் அமைச்சு பதவி வகிக்கும் எந்த இடத்திலும் தவறானவர்களுக்கு இடம் கிடையாதெனவும் மோசடி மற்றும் ஊழல் என்பவற்றை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடக மாநாட்டில் ஐ.ரீ.என் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், செலசின நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக தனக்கு தகவல் கிடைக்கவில்லையெனவும் அது தொடர்பில் தகவல் வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

விரைவில் இது தொடர்பில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.ரீ.என் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அதனுடன் தொடர்புள்ளவர்களுக்கு தராதரம்பாராது நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.(பா)

 

ஷம்ஸ் பாஹிம்

Thu, 10/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை