அதிகமான பயணிகளை ஏற்றி சென்றால் இனி ஆபத்து

பேருந்துகள் மீது விசேட கவனம்

பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை கண்காணிப்பதற்கு நேற்று முதல் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

குறித்த சட்டத்தை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பேருந்துகளின் உரிமங்களும் இரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Tue, 10/05/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை