பல்கலைக்கழக மாணவர்களுக்கு 7,8 ஆம் திகதிகளில் தடுப்பூசி

பல்கலை மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசங்களுக்கருகிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள் நிறைவுற்றதும் பல்கலைக்கழங்களை திறப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

 
Tue, 10/05/2021 - 09:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை