மேலதிக வகுப்புகள் நவம்பரில் ஆரம்பம்

நிதியமைச்சர் தலைமையில் ஆராய்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் நிதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சாதக தன்மைகள் குறித்து சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடப்படவுள்ளது.

எவ்வாறாயினும் இன்று முதல் அமுலாகும் வகையில் நேற்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டியில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 10/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை