பொன்னி சம்பா அரிசியை ரூ.98க்கு வழங்க ஏற்பாடு

வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

பொன்னி சம்பா அரிசி ஒரு கிலோ 98 ரூபாவுக்கு சதொச ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சந்தையில் அரிசியின் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்து மக்களுக்கு 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் அரிசியை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் இந்தியாவிலிருந்து அரிசியுடன் கப்பலொன்று இலங்கைக்கு வந்தது. அடுத்த அரிசித் தொகையுடனான கப்பல் பெரும்பாலும் இன்று 18ஆம் திகதி இலங்கையை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதனையடுத்து நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களூடாகவும் கூட்டுறவு கடைகளூடாகவும் பொன்னி சம்பா அரிசி ஒரு கிலோ 98 ரூபாவுக்கு வழங்கப்படுமென்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Mon, 10/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை