கொவிட் தொற்றால் பிள்ளைகளின் உடல், உளச் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

கொவிட் தொற்றால் பிள்ளைகளின் உடல், உளச் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

உலகளாவிய கொவிட்19 பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால், பிள்ளைகளின் உடல் மற்றும் உளச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளின் உளவியல் சமூக நடத்தைகள், அவர்களின் ஒட்டுமொத்த நலன்களைப் பாதிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். தென் கிழக்காசிய பிராந்தியத்தில் பாடசாலை சுகாதார ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு புத்துயிரூட்டும் நோக்கத்துடன் (12) நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.

தென்கிழக்காசிய பிராந்தியத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேசியபோது, ‘பாடசாலை சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தல்’ பற்றி சுகாதார அமைச்சர் யோசனை கூறினார்.

இந்த முன்முயற்சியின் கீழ், உலக சுகாதார ஸ்தாபனம், UNESCO, UNICEF, UNFPA, WFP ஆகிய அமைப்புக்களுடன் 11 நாடுகளின் அமைச்சர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர். கருத்தரங்கு 14ஆம் திகதி வரை தொடரும்.

மாணவர்கள் பாடசாலகளில் இருந்து எவ்வளவு விலகியிருக்கிறார்களோ, அந்தளவு பாடசாலைக்குத் திரும்புவது கஷ்டமாகும்.

எனவே, கடந்த சில தசாப்தங்களாக கல்வியைப் பெறுவதில் அவர்கள் அடைந்த முன்னேற்றங்களின் பெறுபேறுகளையும் அனுகூலங்களையும் இழக்கும் சாத்தியம் அதிகமென வலியுறுத்தப்பட்டது

எம்.ஏ. அமீனுல்லா

Thu, 10/14/2021 - 11:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை