இன்று நாட்டின் 24 மாவட்டங்களில் 174 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 24 மாவட்டங்களில் 174 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-174-Vaccination-Centers-In-24-Districts-October-14

- நாளை கொழும்பிலுள்ள A/L பரீட்சார்த்திகளுக்கு Pfizer தடுப்பூசி

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (14) நாடு முழுவதும் 24 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 174 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

கொவிட்-19 தடுப்பூசியை இதுவரை பெற்றுக் கொள்ளா பல்கலைக்கழக மாணவர்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக அதனைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலை மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (15) வெள்ளிக்கிழமை வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் 15 இல் கொழும்பிலுள்ள A/L பரீட்சார்த்திகளுக்கு Pfizer தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (13) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (14) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Thu, 10/14/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை