இந்திய பசளை கொள்வனவில் தன்மீது பொய்யான குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் செயலாளர் சட்ட நடவடிக்கைக்கு தயார்

இந்தியாவிலிருந்து பசளை கொள்வனவு செய்வதற்காக அரச வங்கியொன்றில் தனிப்பட்ட கணக்கொன்றை ஆரம்பித்தல் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி, ஒருசில ஊடகங்கள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ள பொய்யான  செய்தியை ஜனாதிபதியின் செயலாளர் முற்றாக மறுத்தார்.

அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் உண்மைக்குப் புறம்பான வகையில் உருவாக்கப்பட்டதாகும். அரச வங்கியொன்றில் கணக்கொன்றை ஆரம்பித்தல் என்பது, அந்த வங்கிக்கும் கணக்கு உரிமையாளருக்குமிடையிலான செயற்பாடாகும். இதில், உரிய விதிமுறைகளுக்கமைய செயற்படுவது வங்கியின் பொறுப்பாகும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி தன்னை இலக்கு வைத்து திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொய்ப் பிரசாரம் தொடர்பாக, ஏற்கனவே கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்தார்.

Mon, 10/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை