தேர்தலை நடத்துவதற்கான சூழல் இப்போது இல்லை என்பதே உண்மை

சகல தரப்புடனும் கலந்துரையாடியே இறுதி முடிவு

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போமென உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில், கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹான பண்டார,

அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கும் போது மாகாணசபைகள் தேர்தலை அல்லது உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தமாவதை போல் தெரிகின்றது, அவ்வாறு ஏதேனும் தேர்தலை நடத்தவுள்ளீர்களா? அப்படியென்றால் எந்த தேர்தல் நடத்தப்படும்? தேர்தல் நடந்தால் புதிய முறையில் நடக்குமா? அல்லது பழைய முறைமையில் நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 10/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை