மூன்று வாரங்களுக்குள் சீமெந்து தட்டுப்பாடுக்கு தீர்வு வரும்

அமைச்சர் லசந்த அழகியவண்ண உறுதியளிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எதிர்வரும் 03 வாரங்களுக்கு தொடருமெனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, 03 வாரங்களின் பின்னர் சந்தைக்கு தேவையான சீமெந்தை விநியோகிப்பதற்கு இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீமெந்து மற்றும் சீனி இறக்குமதியாளர்களுடன் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அது மாத்திரமன்றி கடந்த தினங்களில் 230 ,- 240 ரூபா வரையில் சீனியின் விலை உயர்வடைந்தது. எவ்வாறிருப்பினும் நுகர்வோர் அதிகாரசபை என்ற ரீதியில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளோம்.

எனவே கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சதொச என்பவற்றில் சிவப்பு மற்றும் வெள்ளை சீனி என்பவற்றை கட்டுப்பாட்டு விலையில் விநியோகிப்பதற்கு உகந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 10/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை