மேலுமொரு தொகை நாட்டை வந்தடைவு

பைசர் தடுப்பூசியின் மேலும் 3,05,370 டோஸ்கள் நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன. இத் தொகை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதாகும். இவை நெதர்லாந்திலிருந்து தோஹா வழியாக கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான நிலையத்தை வந்தடைந்த 1,818 கிலோ எடையுள்ள இந்த தடுப்பூசிகள் விமானத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பின்னர் கொழும்பிலுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

 

Tue, 10/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை