முல்லைத்தீவு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு

இலங்கையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாது இயங்கிய ஒரே ஒரு வைத்தியசாலையாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இதுவரை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பல்வேறு கொடையாளர்களின் 40 மில்லியன் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை இலங்கை உணர் அழியியல் சங்கத் தலைவர் பேராசிரியர் மாகொழுகம நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் க.வாசுதேவா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை உணர் அழியியல் சங்கத் தலைவர் பேராசிரியர் மாகொழுகம, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் என பலரும் கலந்துகொண்டனர்.

Sun, 10/31/2021 - 14:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை