உலக நகரங்கள் தினம் இன்று; பிரதமர் வாழ்த்துச் செய்தி

உலக நகரங்கள் தினம் இன்று; பிரதமர் வாழ்த்துச் செய்தி-World Cities Day-PM Mahinda Rajapaksa

நிலையான அபிவிருத்தி தொடர்பில் முழு உலகினதும் கவனத்தை திருப்பும் உலக நகரங்கள் தினத்தை (World Cities Day) முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நகரமயமாக்கல் என்பது ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியின் தனித்துவமான பிரதிபலிப்பாகும். எனினும் நகர்ப்புற வாழ்க்கை சூழலை நிலையான எண்ணக்கருவின் ஊடாகவே நாம் ஊக்குவிக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உலக நகரங்கள் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்ற விளைவுகளை எதிர் கொள்ளக்கூடிய நகரங்களை நிர்மாணிப்பது எம் மத்தியில் காணப்படும் பாரிய சவாலாகும். அதற்கான கொள்கை தீர்மானங்களை உரிய நேரத்தில் முன்னெடுப்பதற்கு நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

சமீபத்திய வரலாற்றில் நகர அபிவிருத்தி தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதற்கு கொள்கை ரீதியில் நிலையான நகர்ப்புற சூழலை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

இன்று உலக சனத்தொகையில் சுமார் 55 சதவீதமானோர் நகர்ப்புற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த தொகையானது 2055ஆம் ஆண்டளவில் 70 சதவீதம் வரை உயர்வடையும் என ஐக்கிய நாடுகள் சபை இதுவரை மதிப்பிட்டுள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதனால் இலங்கையிலும் நகரமயமாக்கல் நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றமை உண்மையே. இவ்வாறு தினமும் அதிகரித்துவரும் நகர்ப்புற மக்களுக்கான வீட்டு வசதிகள், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை நாம் மேம்படுத்த வேண்டும்.

நகர்ப்புற சூழலில் குப்பைகளை அகற்றல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியன சாதாரணமானவை அல்ல.

காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வதற்கு நகரை ஏற்புத்திறன் கொண்டதாக்குதல் என்ற இவ்வாண்டின் உலக நகரங்கள் தின தொனிப்பொருளின் ஊடாக இதிலுள்ள சவால் மேலும் தெளிவுபடுத்தப்படுகிறது.

உலகளாவிய நகரமயமாக்கலில் சர்வதேச சமூகத்தின் ஆர்வத்தை மேம்படுத்தல், நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளுக்காக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு பங்களிக்கும் எதிர்பார்ப்புடன் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இத்தினத்தை பிரகடனப்படுத்தியது.

ஒழுங்கற்ற நகரமயமாக்கலின் விளைவாகவே நகரை அண்மித்த குடிசைகளும், சேரிகளும் தோற்றம் பெறுகின்றன. நகர அபவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற ரீதியில் நிலையான அபிவிருத்தியின் ஊடாக உயர் வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தி கொடுத்து நிலையான நகர வசதிகளை மக்கள் அனுபவிக்க கூடிய வகையில் மக்களுக்கு முறையான நகரங்களை உரித்தாக்குவதே எனது எதிர்பார்ப்பாகும்.

Sun, 10/31/2021 - 10:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை