சீன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்

சீனாவிலிருந்துவரும் சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பசளையின் மாதிரி மீண்டும் பரிசோதிக்கப்பட மாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் அதனைப் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லையென்றும் அதற்கான கட்டணமும் செலுத்தப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சேதன உர மாதிரியை மீளாய்வு செய்யவோ, அதற்கான கொடுப்பனவை வழங்கவோப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thu, 10/28/2021 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை