எரிபொருள் அதிகரிப்பு விடயம் அமைச்சரவையில் பேச முடிவு

அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு

எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அரசாங்கம் நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுக்குமானால் விலை அதிகரிப்பை தவிர்க்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்போவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது ஒரு லீற்றர் பெற்றோலை 14.56 ரூபா நட்டத்திலும், டீசல் ஒரு லீற்றரை 31.46 ரூபா நட்டத்திலும் விற்பனை செய்கிறது. அதனால் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 70 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இத்தகைய நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது அவசியமாகவுள்ளதாக அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 10/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை