கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலமாக கொவிட் பரவ வாய்ப்பு

 

மீண்டு வர பல தசாப்தங்கள் கூட செல்லலாம்

 

கொவிட் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்னும் அவதானமான நிலைமையில் இருந்து மக்கள் மீளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சாதாரணமான நிலமைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்பதை தன்னால் எதிர்ப்பார்க்க முடியாது என தெரிவித்துள்ளா அவர், கொவிட் தொற்றுக்கு முன்னாள் உள்ள பழைய நிலமைக்கு செல்லகூடியதற்கான வாய்ப்பு எந்த விதத்திலும் இல்லை எனவும் புதிய சாதாரண முறையை நோக்கியே பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கொவிட் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tue, 10/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை