இந்தியாவிலிருந்து மேலும் 5000 மெ.தொன் அரிசி

முதல் தொகுதி இன்று வந்தடையவுள்ளது

 

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தையடுத்து வெளிநாடுகளிலிருந்து 5000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இன்றைய தினம் இந்தியாவிலிருந்து 1000  மெற்றிக் தொன் அரிசி இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் நூறு ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் அதிகரித்த விலையை கட்டுப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியுடன் கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 10/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை