அரசியல் இல்லை; சமூக சேவையிலேயே நாட்டம்

சந்திரிகாவின் புதல்வர் விமுக்தி முகநூலில் பதிவு

 

தனக்கு அரசியலில் பிரவேசிக்கும் எதிர்ப்பார்ப்பு இல்லை. ஆனால் தனிப்பட்ட இயலுமையால் முக்கியம் என எண்ணும் சமூக சேவைகளில் ஈடுபட எதிர்ப்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கௌரவமான, சாதாரண மற்றும் பிரசித்தி அற்ற வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் தனது தனித்துவத்திற்கு மதிப்பளிக்குமாறு இலங்கையின் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தாய் நாட்டை நேசிக்கும் தான், தனிப்பட்ட இயலுமை மூலம் முக்கியமானதாக எண்ணும் சமூக சேவைகள் குறித்து மற்றவர்களுக்கு விளக்கவும் , அவற்றுக்காக செயற்படவும் எதிர்ப்பார்த்துள்ளதாக விமுக்தி குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

 

Tue, 10/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை