அதிக மழை வீழ்ச்சி; 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

அதிக மழை வீழ்ச்சி; 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை-Landslide Waring-Galle-Kalutara-Kegalle-Ratnapura

- நாட்டின் பல பகுதிகளிலும் 100 மி.மீ. வரை மழைவீழ்ச்சி

காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை நண்பகல் 12.00 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் 100 மி.மீ. வரை மழைவீழ்ச்சி

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மாகாணங்களில் ஆங்காங்கே 100 மில்லி மீற்றர் வரையான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Tue, 10/05/2021 - 15:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை