365 நாட்களும் சிறுவர் தினத்தை கொண்டாடுவோம்

சிறுவர் விவகார அமைச்சர் பியல் நிசாந்த

‘அனைத்துக்கும் முன் பிள்ளைகள்’’ என்னும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு, முன் பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம். பியால் நிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை சிறுவர் சமுதாயம் தற்போது கொவிட் தொற்று காரணமாக நிச்சயமற்ற சூழலில் வாழ்வது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவர்கள் அனுபவித்து வரும் இந்த நிலைமையை தடுப்பதற்காக எனது அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் தேசிய மட்டத்தில் பல வேலைத்திட்டங்களை புதிய அணுகுமுறையுடன் செயற்படுத்தி வருகின்றன. சர்வதேச சிறுவர் தினத்தை ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் வருடத்தில் 365 நாட்களும் அர்ப்பணிப்புடன் எமது அமைச்சு செயல்படுவதோடு இம்முறை அக்டோபர் 1ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்திற்காக பல நிகழ்ச்சிகளை அக்டோபர் மாதம் முழுவதும் ஏற்பாடு செய்துள்ளது. பிள்ளைகள் எனப்படுவோரே அனைத்தும். அதனால் எமது அனைவரினதும் உயிருக்கும் மேலாக இருப்பது பிள்ளைகள் மாத்திரமே.

 

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை