31 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி

நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

31 இலட்சம் லீற்றர் திரவ உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில் அதன் முதல் தொகுதியாக 100,000 லீற்றர் இன்று (19) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, சீனாவிலிருந்து சேதனப்பசளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பசளை மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவற்றில் அபாயகரமான பக்டீரியாக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், அந்த இறக்குமதி முயற்சி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 10/19/2021 - 07:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை