2022 பட்ஜட் விவாதம் நவ.12 முதல் டிச.10 வரை

அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை நவம்பர் 12 முதல் டிசம்பர் 10 வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். 2022 ஆம்

ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாத நிகழ்ச்சி நிரல் கீழ்வரும் வகையில் நடத்துவதற்கு பிரதமர் சமர்ப்பித்த ஒழுங்குபடுத்தல் விடயங்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

2021 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்த பின்னர், விவாதம் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 22 ஆம் திகதி வரை விவாதம் நடத்தப்படும்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான செயற்குழு விவாதம் 2021 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2021 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்தவும், வரவு செலவுத் திட்டம் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பை 2021 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 10/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை