மக்கள் மீது பாரத்தை சுமத்தாது அரசே அதனை ஏற்க வேண்டும்

அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மீது சுமையை சுமத்தாமல் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்லுதல் காரணமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விற்பனையில் பாரிய நட்டத்தை எதிர் கொண்டுவருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மம்பில தெளிவுபடுத்தியுள்ளார்.

எரிபொருள் விலை தொடர்பான பிரச்சினையை அவர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

அதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போதைய நிலையில் எரிபொருளின் விலையை அதிகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் மீது சுமையை சுமத்தாமல் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 10/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை