கிளிநொச்சி வைத்தியசாலையில் ரூ. 1.9 கோடி செலவில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் ரூ. 1.9 கோடி செலவில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம்-Enhanced Dialysis Unit for Kilinochchi Hospital

- யாழ் சென்று வந்த நோயாளிகளின் சிரமத்திற்கு முற்றுப்புள்ளி

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  இரத்த சுத்திகரிப்பு நிலையம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட இரத்த சுத்திகரிப்பு தேவையுடையவர்கள் இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அதிகரித்த போக்குவரத்து செலவுகளை மேற்கொண்டு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வந்த நிலைமை இதன் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் ரூ. 1.9 கோடி ரூபாவில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம்-Enhanced Dialysis Unit for Kilinochchi Hospital

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  நிலவி வந்த இக் குறைப்பாட்டை கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம் அவுஸே்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் நிதி அனுசரணையில் 1.9 கோடி ரூபா நிதிச் செலவில் 5 இரத்தச் சுத்திகரிப்பு இயந்திர தொகுதிகளை கொண்ட சிகிச்சை நிலையத்தை அமைத்துக்கொடுத்துள்ளனர்.

மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ். சுகந்தனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன்பந்துல சேன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார  அமைச்சின் செயலாளர்  பி. செந்தில் நந்தன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் யாழ்  போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந. சரவணபவன்  கிளிநொச்சி நகர ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜயசுந்தர, மற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Sun, 10/17/2021 - 20:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை