குறை கடத்தி உற்பத்தியில் சீனா பின்னடைவு

உலகளாவிய கைத்தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகக் கருதப்படும் குறை கடத்தி (Semiconductor) உற்பத்தியில் 2025ஆம் ஆண்டில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற சீன அரசாங்கத்தின் எதிர்பார்ப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025 ஆம் ஆண்டளவில் சீனாவின் மொத்த குறை கடத்தி உற்பத்தியில் எழுபது சதவீதத்தை உள்ளூரில் உற்பத்தி செய்வது என்ற இலக்கை முன்வைத்து சீன அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் கடந்த வருடம் அதன் உள்ளூர் உற்பத்தி 16 சதவீதமாகவே இருந்தது சீன அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குறை கடத்தி உற்பத்தித் துறையில் அமெரிக்காவே முன்னிலை வகிக்கிறது. சீனா உட்பட உலக நாடுகள் தமது தேவைகளை இறக்குமதி செய்கின்றன. இதனால் குறை கடத்திகளுக்கு உலகளாவிய விநியோகத்தில் பற்றாக்குறை நிலவி வருகிறது. சீனாவின் குறை கடத்தி தேவை வருடா வருடம் அதிகரித்து வருவதையடுத்தே தன்னிறைவு அடைவதற்கான திட்டங்களை 2014 ஆம் ஆண்டில் சீனா வகுத்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வாகன தயாரிப்பு துறைக்கு தேவையான குறை கடத்தி உற்பத்தியும் உள்நாட்டு விநியோகமும் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் 2014 ஆம் ஆண்டு சீனா 22 பில்லியன் அமெரிக்க டொலர்களை குறை கடத்தி உற்பத்தித் துறையில் முதலீடு செய்தது. 2019 ஆம் ஆண்டு மீண்டும் 200 பில்லியன் யுவான்களை முதலீடு செய்தது.

செமி கண்டக்டர்களுக்கான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்திலும் சீனா முதலீடு செய்திருப்பதோடு வரிச் சலுகைகளையும் அறிவித்துள்ளது.

Sun, 10/17/2021 - 19:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை