ஊருவரிகே ஹீன் மெனிக்க கொவிட் தொற்றுக்கு பலி

ஊருவரிகே ஹீன் மெனிக்க கொவிட் தொற்றுக்கு பலி-Uruwarige Vannila Aththo's Wife-Uruwarige Heen Menika Died

ஆதிவாசி தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்க பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

தம்பான ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ, அவரது மனைவி உட்பட 44 ஆதிவாசிகளுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

சிறுநீரகம் நோய் தொடர்பான சிகிச்சைகளை பெற்று வந்த ஊருவரிகே ஹீன் மெனிக்கவுக்க கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, ஊருவரிகே வன்னில அத்தோ உள்ளிட்ட அவரது சமூகத்தினர் கடந்த ஜூலை மாதம் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sun, 09/05/2021 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை