இன்று நாட்டின் 17 மாவட்டங்களில் 132 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 17 மாவட்டங்களில் 132 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-132 Vaccination Centers-17 Districts-Sep-05

- கொழும்பில் நாளை முதல் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி (UPDATE)
- இன்று காலை வந்தடைந்தது மேலும் 4 மில்லியன் Sinopharm டோஸ்கள்

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (05) நாடு முழுவதும் 17 மாவட்டங்களிலும் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 132 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளையதினம் (06) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் அறிவித்துள்ளார்.

 

 

அத்துடன், இன்று (05) அதிகாலை சீனாவிலிருந்து மேலும் 4 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

 

 

மொத்த Sinopharm தடுப்பூசி டோஸ்கள் - 22 மில்லியன்

இலவசமாக கிடைத்தவை (3 மில்.)

மார்ச் 31 - 600,000 (0.6 மில்.)
மே 25 - 500,000 (0.5 மில்.)
ஜூலை 27 - 1,600,000 (1.6 மில்.)
ஓகஸ்ட் 28 - 0.3 மில்லியன்

கொள்வனவு செய்யப்பட்டவை (19 மில்.)

ஜூன் 06 - ஒரு மில்லியன்
ஜூன் 09 - ஒரு மில்லியன்
ஜூலை 02 - ஒரு மில்லியன்
ஜூலை 04 - ஒரு மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஓகஸ்ட் 06 - 2.14 மில்லியன்
ஓகஸ்ட் 08 - 1.86 மில்லியன்
ஓகஸ்ட் 24 - 1 மில்லியன்
ஓகஸ்ட் 28 - 2 மில்லியன்
செப்டெ. 04 - 4 மில்லியன்

நேற்று (04) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (05) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

Sun, 09/05/2021 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை