பொதுச் சபையில் ஜோ பைடன் உரை

உலகம் மிகவும் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தசாப்தத்தில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அவர் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது, ஈரானுடனான உறவு, கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவின் அணு ஆயுத விலக்கலை வலியுறுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை உட்பட பல விடயங்களை அவர் சூசகமாகப் பேசினார்.

பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க அறிவிக்கப்பட்ட நிதியுதவியை 2024இல் இரட்டிப்பாக வழங்குவதாக ஜோ பைடன் கூறினார்.

“பிளவுபட்ட உலகில் புதிய பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை. எந்தவொரு நாடாக இருந்தாலும் அதனுடன் அமைதித்தீர்வை எட்டும் நடவடிக்கையை ஆரம்பிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. இராணுவ நடவடிக்கை என்பது எல்லா நேரத்திலும் கடைசி வாய்ப்பாகவே இருக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Thu, 09/23/2021 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை