காட்டுத் தீயில் இருந்து உலகின் பெரிய மரத்தை காக்க முயற்சி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயால் உலகிலேயே மிகப் பெரிய மரங்கள் எரிந்து விடக்கூடாது என்பதற்காக அவற்றின் மீது தீ பரவுவதை தடுக்கும் போர்வைகளைச் சுற்றும் பணியில் தீயணைப்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது கலிபோர்னியாவின் சீக்கோயா தேசியப் பூங்காவில் எரிந்துவரும் காட்டுத் தீ அருகேயிருக்கும் பெருங் காட்டைத் தாக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.

இந்தக்காட்டில் 275 அடி உயரம் கொண்ட ஜெனரல் ஷெர்மன் உள்ளிட்ட சுமார் 2,000 சீக்கோயா மரங்கள் இருக்கின்றன.

தீயை அணைப்பதற்காக ஹெலிகொப்டர்கள், விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன் சுமார் 350 வீரர்கள் போராடி வருகின்றனர். தீயில் இருந்து காப்பதற்காக அலுமினியம் தாள்களைக் கொண்ட போர்வைகளை ஷெர்மன் உள்ளிட்ட முக்கியமான மரங்களில் சுற்றியுள்ளனர்.

உலகத்தில் இப்போதிருக்கும் மரங்களில் மிகப்பெரிய மரமாக ஜெனரல் ஷெர்மன் கருதப்படுகிறது. இதன் வயது சுமார் 2,700. இந்த மரம் இயற்கையிலேயே தீயில் இருந்து பாதுகாப்புப் பெரும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 09/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை