ரஞ்சனுக்கு மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு சந்திரிகாவும் கடிதம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கடிதம் அனுப்பியுள்ளார்.

பாரதூரமான குற்றங்கள் எதனையும் புரியாமல் சுமார் 8 மாதகாலமாக சிறையில் துன்பத்தை அனுபவித்துவருவதால் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினமான (ஞாயிற்றுக்கிழமை)  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மக்களுக்குச் சார்பான அரசியல்வாதியாகிய ரஞ்சன் ராமநாயக்கவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வார் என்று எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதியிலிருந்து நான்கு வருடகால சிறைத் தண்டனைக்கு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.'

Mon, 09/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை