ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது

இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து மிச்செல் வாய்மூல அறிக்கை

வெளிவிவகார அமைச்சர் GL பீரிஸ் இணைய வழியாக கலந்துரையாடுவார்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு இன்றைய தினம் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. அதற்கிணங்க இன்று முதல் தினத்தில் மனித உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஆ​ையாளர் மிச்செல் பெஷலே இலங்கை தொடர்பான வருடாந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு இன்றைய தினம் ஆரம்பமாகி அதன் அமர்வுகள் அடுத்த மாதம் 8ம் திகதி வரை சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளன

ஐநா மனித உரிமைப் பேரவையின் 46வது அமர்வின்போது இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டது.

அந்த ஆலோசனைகளுக்கு இணங்க இலங்கை பெற்றுக் கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பான வருடாந்த அறிக்கை மனித உரிமை ஆணையாளரினால் இன்றைய தினம் ஆரம்பமாகும் அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது தொடர்பான அங்கத்துவ நாடுகளின் விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

அதற்கிணங்க கடந்த சில தினங்களுக்கு முன் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மனித உரிமை பேரவை அமர்வு தொடர்பில் கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 09/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை