மக்களின் அவலங்களை அரசியலாக்குவது ஏற்க முடியாதது

பாராளுமன்றில் அமைச்சர் டக்ளஸ்

மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்குள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்தார். கொவிட் 19 எனும் நோயிலிருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்பாக நேற்று (06) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

“சாணேற முழம் சறுக்கும்” என்பார்கள். எமது நாட்டிலும் அவ்வாறான நிலையே காணப்படுகின்றது. நாட்டில் கொரோனா தொற்று நாளாந்தம் 200 மேற்பட்ட மரணங்களை ஏற்படுத்துவதுடன் 03 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்களையும் உருவாக்கி வருகின்றது.

இந்த இரண்டு பக்க அடியிலிருந்து மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் எதிர்க் கட்சியினர் தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் மனித குலத்தை பலியெடுத்துவரும் இந்த கொரோனா பெருந்தொற்றை இல்லாதொழிக்க உலக நாடுகள் தமக்கிடையே இருந்த அரசியல் பேதங்ளை மறந்து ஒன்றுபட்டு உறுதி கொண்டுள்ளனர். அதுபோல இலங்கைத் தீவிலும் அனைத்து தரப்பினரும் தத்தமது சுயநலன்களிலிருந்து விடுபட்டு ஒன்றுபட்டு எமது நாட்டிலிருந்து இந்த பெருந்தொற்றை இல்லாதொழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.வளர்ந்த தேசங்களே இன்று இந்த பெருந்தொற்றால் ஆடிப்போயுள்ள நிலையில் வளர்ந்துவரும் எமது நாடான இலங்கை தீவு எம்மாத்திரம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Tue, 09/07/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை