நாட்டில் தனியார் துறைக்கு நினைத்தவாறு பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது

கட்டுப்படுத்தவே இச்சட்டம் -அமைச்சர் மஹிந்த அமரவீர

நாட்டில் தனியார் துறைக்கு நினைத்தவாறு பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது. அதனை கட்டுப்படுத்தவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மகிந்த அமரவீர இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவசரகாலம் தொடர்பான வர்த்தமானி வெளியான நாள் முதல் அது தொடர்பில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தொழிற்சங்கங்களை ஒடுக்கவும், மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்காகவும் இது பயன்படுத்தப்படவுள்ளதாக கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை தனியாக எடுக்கவில்லை. பொருட்களின் விலைகள் அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருள் மாபியாக்களின் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கையெடுக்கும் வகையில் முடியாத கட்டத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அரசாங்கம் என்ற ரீதியில் வர்த்தக பிரிவினரை பாதுகாத்து தனியார் துறையை நம்பி செயற்பட்டோர். ஆனால் தனியார் துறையை நம்பி மக்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியாது. இதனால் அரச துறையை பலப்படுத்த வேண்டும். எமது சதோசவை வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வரும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏதேனும் நிலைமை ஏற்பட்டால் தட்டுப்பாடு இன்றி பொருட்களை விநியோகிக்கக் கூடிய முறைமையை தயாரிக்க வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Tue, 09/07/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை