பூஸ்டர் தடுப்பூசி குறித்த தீர்மானம் இதுவரை இல்லை

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நம்பிக்கை

தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் நிறைவுபெறுமானால் ஒக்டோபர் மாத இறுதியில் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை டெல்டா திரிபு வைரஸ் நாட்டுக்குள் பரவி வருவதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டத்தின் பிரதிபலனை பெற்றுக்கொள்வதற்கு மேலும் சில வாரங்கள் செல்ல வேண்டும். ஆகக்குறைந்தது மேலும் இரண்டு வாரங்கள் அதனை நீடிப்பது அவசியமாகும்.நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து முறையாக பின்பற்றுவார்களேயானால் வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையும். அத்தகைய சூழ்நிலையில் மீண்டும் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 09/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை