காபூல் அரசுக்கு பீஜிங் முழுமையான ஆதரவு

காபூலில் அமையவுள்ள புதிய தலிபான் அரசுக்கு முழுமையான அங்கீகாரமளிக்க சீனா முன்வந்துள்ளது. அதற்கான நிபந்தனைகளையும் அது தலிபான் உயர் பீடத்துக்கு தெரிவித்துள்ளது. வடக்கு கூட்டணிப் படையினரோடு பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் தலிபான் படையினர் கடுஞ் சண்டையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் தன் முழுமையான ஆதரவை சீனா வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவின் நிபந்தனைகளில் அந்நாட்டின் தேசிய நலன்கள் பாதுகாக்கப்படுவதை ஆப்கான் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு மனித உரிமைகள், பெண் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் எந்தக் குறிப்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. மறுசீரமைப்பு தொடர்பாகவும் சீனா மௌனம் காத்திருக்கிறது.

Fri, 09/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை