சமூக ஊடகங்களில் LTTE அடையாள போலியான NIKE காலணி வீடியோ

சமூக ஊடகங்களில் LTTE அடையாள போலியான NIKE காலணி வீடியோ-Video of Counterfeit NIKE Shoes With LTTE Insignia Circulating on Social Media

சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய காலணிகள் என வெளியிடப்படும் வீடியோவில் உள்ளது போலியான NIKE காலணிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

NIKE சின்னம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய ஒரு ஜோடி காலணிகளின் வீடியோ சமூக  வலைதளங்களில் பரவியமை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ள காலணிகள் NIKE நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை என, NIKE Inc நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நிறுவனத்தின்  நடைமுறைக்கு ஏற்ப பொருத்தமான முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுமென NIKE, Inc நிறுவனம் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக, வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

Sun, 08/01/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை