சிறுவர் பாலியல் துன்புறுத்தலை கண்டறிய அப்பிளில் புது அம்சம்

ஐபோன், ஐபாட் ஆகிய சாதனங்களில் சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்களைக் கண்டறிந்து புகார் அளிக்கும் அம்சத்தை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. சிறுவர்களைப் பாதுகாப்பதோடு, சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதும் அதன் நோக்கம் என நிறுவனம் தெரிவித்தது.

பயனீட்டாளர்கள், அப்பிள் நிறுவனத்தின் ஐகிலவுட் மேகக்கணிமைச் சேவையில் பதிவேற்றும் படங்கள், சிறார் பாதுகாப்பு அமைப்புகள் வழிகாட்டும் பாலியல் துன்புறுத்தல் படங்களுடன் ஒப்பிடப்படும்.

அத்தகைய படங்கள் குறித்து, அமெரிக்காவின் காணாமற்போன, துன்புறுத்தப்படும் சிறுவர்களுக்கான தேசிய நிலையத்திடம் அப்பிள் புகார் அளிக்கும். எனினும், அந்தப் புதிய அம்சத்தை அரசாங்கங்களும் மற்ற அமைப்புகளும் தவறாகப் பயன்படுத்தலாம் என சில மின்னிலக்க உரிமை அமைப்புகள் குறைகூறியுள்ளன.

ஆனால், பயனீட்டாளர்களின் தனிநபர் அந்தரங்கத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிள் தெளிவுபடுத்தியது.

Sun, 08/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை