ஒரு வார காலத்தில் அறிக்கை வெளியீடு

கொழும்பில் தற்போது நூற்றுக்கு நூறு வீதம் டெல்டா திரிபு வைரஸ் பரவல் இடம்பெறுவதாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அதற்கு மேலாக டெல்டா சுப்பர் திரிபு கொரோனா வைரஸ் உருவாகி வருகின்றதா என்பது தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுவதாகவும் ஒரு வார காலத்தில் அது தொடர்பில் தகவல்களை வெளியிட முடியுமெனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஜீவ வாயு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

புதிய திரிபுகள் உருவாகி வரும் நிலையில் சுப்பர் டெல்டா திரிபு கொரோனா வைரஸ் உருவாகி வருகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க ஒரு வார காலத்தில் அது தொடர்பான அறிக்கையை வெளியிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்டங்களிலும் டெல்டா திரிபு கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய முடியுமானால் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை