ஜனாதிபதியின் ஆலோசனை குழுவிற்கு அரசியல் கைதிகளின் பெற்றோர் வரவேற்பு

தமிழ் கைதிகளை நேரில் சந்தித்து உண்மைகளை கண்டறிய வேண்டுகோள்

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைச் சபையை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ‘குரலற்றவர்களின் குரல் அமைப்பு’ வரவேற்கின்றது. மேலும், ஆலோசனைச் சபையின் செயற்கருமங்கள் எப்போதும் போல் காலத்தால் அள்ளுண்டு போகாது, ‘தமிழ் அரசியல் கைதிகளின் நீண்ட கொடுஞ்சிறை வாழ்வுக்கு முழுமையான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும்’ என்று இவ் அமைப்பு எதிர்பார்ப்பதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 13 ஆவது பிரிவுக்கமைய, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைச் சபையானது நேரடியாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்வுகளை பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் குரலற்றவர்களுக்கான குரல் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இருதரப்பினரும் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தச் சபையானது, பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து இவர்களுக்கான விடுதலைப் பொறிமுறையினை கண்டறிந்து, ஜனாதிபதிக்கான பரிந்துரை ஆலோசனையைச் செய்யுமென்று தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக நீண்டகாலமாக ஆலோசனைச்சபை ஒன்று நியமிக்கப்படாத காரணத்தினால் கைதிகள் தங்களது பிரச்சினைகளை இச்சபையிடம் முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை