வைத்தியசாலைகளுக்கு உதவி செய்ய முன்வரவும்

வெளிநாடு வாழ் இலங்கையரிடம் சுதர்ஷனி கோரல்

 

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் மெல்பர்னிலுள்ள சிங்கள வானொலி ஒன்றுடனான உரையாடலின்போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது,நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு அவர் கோரியுள்ளார். மேலும், ஒட்சிசன் தட்டுப்பாடும் நிலவுகிறது. இவற்றை பெற்றுக்கொடுக்குமாறும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுள்ளார்.

இதேவேளை, மூன்று இலட்சத்து அறுபதாயிரம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Sat, 08/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை