நடமாடும் தடுப்பூசி திட்டம் யாழில் ஆரம்பம்

இராணுவத்தால் நேற்று முன்னெடுப்பு

கொவிட் தடுப்பு செயலணி தலைவரும் இராணுவத்தளபதியுமான சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் இராணுவ மருத்துவ பிரிவினரின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நேற்று யாழ்.மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இராணுவத்தில் 512 ஆவது பிரிகேட் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே நாடு பூராகவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்.

மாநகரசபையை உள்ளடக்கி குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.

 

 

Fri, 08/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை