பொது சுகாதார அதிகாரி மீது உமிழ்ந்தவர் விளக்கமறியலில்

17ஆம் திகதி வரை தடுத்து வைக்க உத்தரவு

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது உமிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிவுல்ல - புஸ்கொலதெனிய பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர் ஒருவர் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நாரம்பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோகர் தனது பணிக்காக சென்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த கொவிட் நோயாளர் என சந்தேகிக்கப்படும் நபரின் தந்தை, பொதுசுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன் அவரை தாக்கி அவர் மீது உமிழ்ந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். பொது சுகாதார பரிசோதகரின் பணிக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

Thu, 08/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை