ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வெளிநாட்டு அமைச்சுக்கு

மகிழ்ச்சி வெளியிட்ட ஜீ.எல். பீரிஸ்

ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சுக்கு வருவதில் மகிழ்ச்சி அடைவதாக புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று (புதன்கிழமை) அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்ெகாண்டார்.

இதனையடுத்து உரையாற்றிய அவர், கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாட்டு அமைச்சிற்கு வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக வெளிச்செல்லும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பாராட்டினார்.

அதேவேளை, வெளிநாட்டு அமைச்சின் அனைத்து நடவடிக்கைகளிலும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் உள்ளார்ந்த சுயமரியாதை மற்றும் கௌரவம் பாதிக்கப்படாதிருப்பதனை உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Fri, 08/20/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை