அதிக விலைக்கு பொருட்களை விற்றால் ஒரு இலட்சம் அபராதம்

அமைச்சரவை அனுமதி வழங்கல்; அமைச்சர் பந்துல தகவல்

நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு 1,00,000 ரூபா அபராதம் விதிக்கப்படுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதன்படி நாட்டில் விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட ஆகக்கூடிய சில்லறை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக 1,00,000 ரூபா அபராதம் விதிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட ஆகக்கூடிய சில்லறை விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 2,500 ரூபா அபராதம் தொகை 1,00,000 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷம்ஸ் பாஹிம்

 

 

Wed, 08/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை